மியான்மார் சைபர் குற்ற முகாம் நடவடிக்கை தோல்வி!

#SriLanka #Crime #Myanmar
Mayoorikka
2 years ago
மியான்மார் சைபர் குற்ற முகாம்  நடவடிக்கை தோல்வி!

மியன்மாரின் சைபர் குற்ற முகாமில் சிக்குண்டுள்ள இலங்கையர்களையும் வெளிநாட்டவர்களையும் மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்ட துணிகர நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

 ஆள்கடத்தல் மனித அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான அரசசார்பற்ற அமைப்பொன்று மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. மிகவும் பாதுகாப்பான கட்டிடத்திற்குள் வைக்கப்பட்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 மியன்மார் முகாமில் சிக்குண்டுள்ளவர்கள் குறித்த சர்வதேச கரிசனைக்கு மத்தியில் அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் தோல்வி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மியன்மாரின் சைபர் குற்ற முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் மோசமான நிலைமைகள் அச்சுறுத்தி இணையவழி மோசடிகளில் ஈடுபடவைத்தல் போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

 மியன்மாரின் தொலைதூர பகுதிகளில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலையில் நடமாடும் குழுவினர் இந்த முகாம்களை இயக்குகின்றனர் மியன்மாரின் இந்த முகாமில் 56 இலங்கையர்கள் சிக்குண்டுள்ளனர் – தாய்லாந்தில் வேலை வாய்ப்பிற்காக சென்ற இலங்கையர்களே இ;சிக்குண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!