மீன ராசிக்காரர்களுக்கு தன ஸ்தான குருவால் சங்கடம் விலகும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
4 months ago
மீன ராசிக்காரர்களுக்கு தன ஸ்தான குருவால் சங்கடம் விலகும் - இன்றைய ராசிபலன்

மேஷம்:

அசுவினி: உங்கள் ஜென்ம ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் செயல்களில் குழப்பம் ஏற்படும். பரணி: நீங்கள் எதிர்பார்த்த வருமானம் வரும். எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். கார்த்திகை 1: லாப ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். வராமல் இருந்த பணம் வரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: எதிர்பாராத செலவு தோன்றும். தொழிலை விரிவு செய்வது குறித்து யோசிப்பீர். ரோகிணி: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. வரவை விட செலவு அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் நெருக்கடிகளை சந்தித்தாலும் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: தொழிலில் உண்டான நெருக்கடி விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். திருவாதிரை: முயற்சியில் இருந்த தடை விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். புனர்பூசம் 1,2,3: தடைபட்டிருந்த செயல்களில் மீண்டும் நடைபெறத் தொடங்கும். விருப்பம் நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பூசம்: குரு சந்திர யோகத்தால் மனம் தெளிவாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். ஆயில்யம்: சங்கடம் விலக ஆரம்பிக்கும். வியாபாரத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

சிம்மம்

மகம்: உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும் என்றாலும் குருவின் பார்வையால் சீராகும். பூரம்: குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். உங்கள் வார்த்தைகளால் சங்கடம் தோன்றும். உத்திரம் 1: குரு பார்வையால் நெருக்கடி விலகும். முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் சங்கடம் தோன்றும்.

கன்னி

உத்திரம் 2,3,4: சந்திராஷ்டமம் என்பதால் முயற்சியில் சங்கடம் தோன்றும். வருமானத்தில் தடை உண்டாகும். அஸ்தம்: வெளியூர் பயணத்தில் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் நெருக்கடி தோன்றும். சித்திரை 1,2: மனதில் குழப்பம் அதிகரிக்கும். முயற்சிகளில் லாபம் உண்டாகும். எதிரிகளால் உண்டான தொல்லை விலகும்.

துலாம்

சித்திரை 3,4: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். குரு பார்வையால் செல்வாக்கு அதிகரிக்கும். சுவாதி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்களை விட்டு விலகிச் சென்றவர் மீண்டும் இணைவார்கள். விசாகம் 1,2,3: உத்தியோகத்தில் பிரச்னை விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் சுமூகமான நிலை உண்டாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: வியாபாரத்தில் போட்டியாளர் விலகுவர். செயல் ஆதாயமாகும். உடல்நிலையில் எச்சரிக்கை தேவை. அனுஷம்: இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும்.கடவுள் வழிபாடு நிம்மதி தரும். கேட்டை: குடும்பத்தினரால் சங்கடம் தோன்றும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு:

மூலம்: நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். மூன்றாமிட சனியால் முயற்சி வெற்றியாகும். பூராடம்: குரு பார்வையால் உங்கள் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். உத்திராடம் 1: நீங்கள் எதிர்பாராத ஆதாயத்தை இன்று அடைவீர். உங்கள் செல்வாக்கு உயரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் ராசியை விட்டு சனி விலகி விட்டதால் நெருக்கடி நீங்கும். லாபம் அதிகரிக்கும். திருவோணம்: உங்கள் முயற்சி முன்னேற்றம் தரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். அவிட்டம் 1,2: உங்கள் செயல்களில் இருந்த தடை விலகும். சமூகத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்களுடன் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக மாறுவர். எச்சரிக்கை அவசியம். சதயம்: உங்கள் விருப்பத்திற்கு மாறாக சில செயல் நடைபெறும். முயற்சியில் தாமதமும் ஏற்படும். பூரட்டாதி 1,2,3: உங்கள் செயல்களில் சங்கடங்களை சந்திப்பீர். ஜென்ம சனியால் நெருக்கடி தோன்றும்.

மீனம்

பூரட்டாதி 4: மனதில் இருந்த குழப்பம் விலகும். செயல்களில் லாபம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். உத்திரட்டாதி: தன ஸ்தான குருவால் உங்கள் சங்கடம் விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். ரேவதி: எதிர்பார்த்த வரவு உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். முயற்சி வெற்றியாகும்.