மேஷ ராசியினருக்கு அலைச்சலும் குழப்பமும் அதிகரிக்கும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
4 months ago
மேஷ ராசியினருக்கு அலைச்சலும் குழப்பமும் அதிகரிக்கும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: முயற்சிகளில் எதிர்பாராத தடை ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். நினைத்ததை அடைவீர். பரணி: நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் இழுபறி உண்டாகும். அரசு விவகாரங்களில் வெற்றி உண்டாகும். கார்த்திகை 1: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. அலைச்சலும், குழப்பமும் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும். ரோகிணி: இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். மிருகசீரிடம் 1,2: போட்டியாளர்களால் நெருக்கடி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: தொழிலில் புதிய உத்திகளைக் கையாள்வீர். உறவினர் வழியில் நன்மை அதிகரிக்கும். திருவாதிரை: முன்னோர் ஆசியால் முயற்சி வெற்றியாகும். தொழிலில் இருந்த போட்டியாளர் விலகுவர். புனர்பூசம் 1,2,3: எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் விருப்பம் நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: உறவுகளால் உதவி கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர். பூசம்: முயற்சியில் வெற்றிபெற திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் திறமை வெளிப்படும். நெருக்கடி நீங்கும். ஆயில்யம்: எதிர்ப்பு உண்டாகும் என்றாலும் கவனமாக செயல்பட்டு வியாபாரத்தில் லாபம் அடைவீர்.

சிம்மம்

மகம்: எதிரிகளால் சங்கடத்தை சந்தித்தாலும் உங்கள் செயல் நிறைவேறும்.நண்பர் ஆதரவு அதிகரிக்கும். பூரம்: மனதில் ஒருவித பயம் வந்துபோகும். எதிர்பார்த்தவற்றில் தடை உண்டாகும். உத்திரம் 1: விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். அமைதி காப்பது நல்லது.

கன்னி

உத்திரம் 2,3,4: உங்கள் முயற்சியில் ஆதாயம் காண்பீர். நட்புகளால் நன்மை அடைவீர். மனதில் இருந்த குழப்பம் அகலும். அஸ்தம்: உங்கள் அணுகுமுறையால் நீங்கள் ஈடுபடும் செயலில் ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சித்திரை 1,2: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி எளிதாக வெற்றிபெறும்.

துலாம்

சித்திரை 3,4: எதிர்பாராத நெருக்கடி தோன்றினாலும் உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர். சுவாதி: புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது. நிறைவேறாமல் இருந்த வேலை முடிவிற்கு வரும். விசாகம் 1,2,3 : உங்கள் திறமை வெளிப்படும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்களுடன் நெருக்கமாக இருந்தவர்களின் வழியே சில சங்கடங்களை சந்திப்பீர்கள். அனுஷம்: உங்கள் செயல் வெற்றியாகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த தகவல் வரும். கேட்டை: பிள்ளைகள் வழியே சில சங்கடங்களை அடைவீர். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

தனுசு

மூலம்: மனதில் இருந்த சங்கடம் நீங்கும். தாய்வழி உறவுகளால் உங்கள் தேவைகள் நிறைவேறும். பூராடம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் சந்தோஷத்திற்காக ஒரு செயலில் ஈடுபடுவீர். உத்திராடம் 1: அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம். உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்படுவதால் இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். திருவோணம்: செயலில் இருந்த தடை விலகும். உயர்ந்தோரின் நட்பினால் நினைத்தது நிறைவேறும். அவிட்டம் 1,2: உங்கள் முயற்சியில் தடை ஏற்பட்டாலும் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.

கும்பம்

அவிட்டம் 3,4: நீண்ட முயற்சிக்குப்பின் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சதயம்: பணவரவு திருப்தி அளிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆரோக்கியத்தில் உண்டான சங்கடம் நீங்கும். பூரட்டாதி 1,2,3: செயல்களில் ஒன்றிரண்டு சங்கடங்களை சந்திப்பீர். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

பூரட்டாதி 4: மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் சங்கடம் தோன்றும். உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். நண்பர்கள் உதவியால் உங்கள் எண்ணம் நிறைவேறும். ரேவதி: மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். செயல்களில் கூடுதல் கவனம் தேவை.