கினியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் மரணம்

#Death #Accident #world_news #Fuel #fire #Rescue #Station #Blast #Guinea
Prasu
2 years ago
கினியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் மரணம்

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கினியா. இந்நாட்டின் தலைநகர் கொனக்ரியில் உள்ள ஹலம் பகுதியில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த கோர தீ விபத்தில் வெளிநாட்டினர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 178 பேர் படுகாயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு,மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4