மன்னாரில் ஜெலட்டின் குச்சிகளுடன் நபர் ஒருவர் கைது!
மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மன்னார் புதிய மூர்வீதி பகுதியில் இன்று (19.12) காலை ஜெலட்டின் (டைனமைட்) தொகுதி மற்றும் டெட்டனேட்டர் குச்சிகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மன்னார், பள்ளிமுனை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனவும், அவரிடமிருந்து 525 ஜெலட்டின் (டைனமைட்) மற்றும் 354 டெட்டனேட்டர் குச்சிகள் மற்றும் 10 இணைப்பு நூல் சுருள்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் ஆலோசனையின் பேரில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கெரம் அவர்களின் ஆலோசனையின் பேரில், ரத்னமணல தலைமையகக் குழுவினர் மேற்கொண்ட தேடுதலில், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் பின்னர் மீட்கப்பட்ட ஜெலட்டினைட் (டைனமைட்) மற்றும் டெட்டனேட்டர் குச்சிகளுடன் கைது செய்யப்பட்ட நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.