ஹோமாகம சமூர்த்தி வங்கியில் கொள்ளை! துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள் கைவரிசை!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஹோமாகம பிட்டிபான களஞ்சியசாலையில் சமுர்த்தி வங்கியில் இன்று (19.12) கொள்ளையிடப்பட்டுள்ளது.
துப்பாக்கியுடன் நுழைந்த இரு கொள்ளையர்கள் ஊழியர்களை பயமுறுத்தி 07 இலட்சம் ரூபா பணத்துடன் தப்பிச் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் கொள்ளையர்கள் வந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்திருந்த கொள்ளையர்கள் ஒரே நேரத்தில் வங்கிக்குள் புகுந்துள்ளனர்.
இதன்போது வங்கியில் 08 பேர் பணிபுரிந்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலகல நோக்கி கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.