அனர்த்த முன்னெச்சரிக்கை முறைமையை வெளிப்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அனர்த்த முன்னெச்சரிக்கை முறைமையை வெளிப்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

புதிய அனர்த்த முன்னெச்சரிக்கை முறைமையை வெளிப்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அனர்த்த முன்னெச்சரிக்கை பொறிமுறையை பலப்படுத்தி இலங்கை பிரஜைகளின் வாழ்க்கையை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி, அனர்த்த முகாமைத்துவ நிலையம், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் SLTMobitel, Hutch, Dialog மற்றும் Airtel தொலைபேசி சேவை வழங்குநர்கள் இணைந்து, அனர்த்தங்களை முன்னரே எச்சரிக்கும் புதிய முறைமையை அறிமுகப்படுத்தியதுடன், அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் ஜனாதிபதி தலைமையில் கைச்சாத்திட்டனர். இந்த நிகழ்வுஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!