யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகரின் மகன் 10 கோடி பெறுமதியான போதைப் பொருளுடன் கைது!

#SriLanka #Jaffna #Arrest #drugs
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகரின் மகன் 10  கோடி பெறுமதியான போதைப் பொருளுடன் கைது!

யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் ராஜனின் மகன் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதிமிக்க போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 யாழ்ப்பாணத்தின் போதைப்பொருள் விற்பனைக் கும்பல்களின் பிரதான வலையமைப்புக்களில் ஒன்றில் இவரின் பங்கு பிரதானமாக இருந்ததாக கருதப்பட்டுவந்த நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யபப்ட்ட நபரிடமிருந்து குஷ் ரக போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த போதைப்பொருள் இலங்கைக்கு புதிய வகையான போதைப்பொருளாகும். 

இன்னும் இலங்கையில் இந்த போதைப் பொருளை தடைசெய்யப்பட்ட போதைப் பொருளாக சட்டத்தில் கொண்டு வரப்படவில்லை. அதனால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ராஜனின் மகன் சிலவேளை பிணையில் வர சந்தர்ப்பம் உள்ளதாக தெரியவருகின்றது. இவர் கைது செய்யப்பட்டு 3 நாட்களாகியும் யாழ்ப்பாணத்தில் உள்ள எந்தவொரு பத்திரிகையும் இவரது கைது தொடர்பாக செய்தி வெளியிடவில்லை என்பதிலிருந்து ராஜனின் செல்வாக்கு எந்த அளவில் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 ராஜனுக்கு சொந்தமாக யாழில் பல எரிபொருள் நிலையங்களும் பல பிரபல வர்த்தக நிலையங்களும் காணப்படுகின்றன. யாழ்ப்பாண முக்கிய அரச அதிகாரிகளை தென்பகுதி அரசியல்வாதிகளின் துணையுடன் இடம்மாற்றம் செய்வதில் ராஜன் கில்லாடியாக செயற்பட்டு வந்தார்.

 போதைப் பொருள் கடத்தல்கள் மற்றும் ஏனைய சட்டவிரேதாத நடவடிக்கைகளுக்காக தனக்கு தேவையானவர்களை யாழ்ப்பாணத்தில் அதிகாரிகளாக வைத்திருப்பதற்கு ராஜன் முயன்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 குறிப்பாக இலங்கை பொதுநிர்வாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தனது பணபலத்தின் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து பல அதிகாரிகளை யாழ்ப்பாணத்திலிருந்து ராஜன் அகற்றியமை குறிப்பிடத்தக்கது. 

ராஜனின் செல்வாக்கில் யாழ்ப்பாணத்தில் செயற்படும் முக்கிய அரச அதிகாரி ஒருவரின் மகனும் போதைப்பொருள் பாவித்து பிரபல பாடசாலையிலிருந்து துரத்தப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது. ராஜன் யாழ்ப்பாணத்தின் பிரபல அரசியல்வாதியும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜனின் அப்பா இராமநாதனின் தம்பியாவான். 

ராஜனுக்கும் அங்கஜனின் அப்பா மற்றும் அங்கஜனுக்கும் இடையில் கடந்த ஓரிரு வருடங்களாக முறுகல் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ் கார்கில்ஸ் கட்டடத்திற்கு அருகில் மணிக்கூட்டு கோபுர வீதியில் அமைந்துள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் நடந்த கொலைச் சம்பவம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடான காலத்தில் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக பலரும் அங்கஜனை குற்றம் சாட்டியிருந்த போது அந்த எரிபொருள் நிலையம் தன்னுடையது இல்லை என அங்கஜன் பகிரங்கமாக அறிக்கை விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 ராஜன் தனது அரசியல் செல்வாக்கு காரணமாக தனது மகனை யாழ் பல்கலைக்கழக உயர் பீடமான பல்கலைக்கழக பேரவைக்கு உறுப்பினராக போட்டிருந்மையும் குறிப்பிடத்தக்கது. 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!