பேருவளை துறைமுகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர்!
#Corona Virus
#Police
#Port
#Sri Lankan Army
PriyaRam
2 years ago
கடலில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பேருவளை மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனைச் சூழவுள்ள வீட்டுத் தொகுதிகள் இன்று அதிகாலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
பேருவளை, பயாகல, அளுத்கம, வெலிப்பன்ன ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சுமார் இருநூறு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கட்டுகுருந்த பயிற்சி முகாமைச் சேர்ந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் இந்த நடவடிக்கையில் இணைந்தனர்.

பேருவில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்படும் மற்றும் திரும்பும் பெருந்தொகையான படகுகள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.