போலி துவாரகா உரையை மீள் ஒளிபரப்பு செய்த சுவிஸ் தமிழ் ஊடகங்கள் மீது பாய்ந்தது வழக்கு!
சுவிஸில் போலி துவாரகாவின் மாவீரர் தின உரையையை மீண்டும் ஒளிபரப்பு செய்த சில ஊடகங்கள் மீது சுவிஸ் இல் பதியப்பட்ட சில அமைப்புக்கள் வழக்கு தொடர்ந்துள்ளதாக சில தரப்பினர் கூறுகின்றார்கள்.
அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் மூலம் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சில ஊடகங்களையே மூடும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வழக்கை உண்மையான துவாரகா இறந்ததாக கூறும் குழுவே தொடர்ந்துள்ளதாகவும், இப் போலி துவாரகா பின்னணியில் பல புலி வேடம் போட்டவர்கள் அகப்படுவார்கள் எனவும், உண்மை முகம் எது? தேசியவாதிகள் யார்? வெறும் முக நூல் வீரர்கள் யார்? தமிழ் வியாபாரிகள் யார்? என்பதும் பிரபாகரன் குடும்ப பராமரிப்புக்கு சேர்க்கப்பட்ட பணம் உண்டியல் மூலம் யார் மூலம் யாருக்கு கொடுக்கப்பட்டது.
இதை சாட்டி உண்டியல் வியாபாரம் செய்த அப்துல்லா சுவிஸ் சூரிச் இல் யாருக்கு எவ்வளவு லட்சம் பணத்தை யாருக்கு ஏமாற்றினார் என்பதெல்லாம் வெளிவர உள்ளது குறிப்பிடதக்கது.
மிகுதி செய்தி lanka4 ஊடகத்தில் வெளிவரும் காத்திருங்கள்