கதிர்காம கந்தன் ஆலயத்தில் திருடப்பட்ட தங்கத் தட்டு தொடர்பில் வெளியான தகவல்!
#SriLanka
#Arrest
#Police
PriyaRam
2 years ago
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் 38 பவுண் தங்க தட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் அந்த களஞ்சியத்திற்கு பொறுப்பாகவிருந்த பூசகர் ஒருவர் கைதானார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையானதை அடுத்து அவர் கைதானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைதானவர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். திட்டமிட்டப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட நிலையில் இந்தியாவில் உயிரிழந்த அங்கொட லொக்கா எனப்படும் மத்துமகே லசந்த சந்தன பெரேராவின் மனைவியினால் கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு 38 பவுண் தங்க தட்டு வழங்கப்பட்டிருந்தது.
குறித்த தங்க தட்டு காணாமல் போனதாக கந்தன் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.