பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவன் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #Arrest #Police #shanakiyan
PriyaRam
2 years ago
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவன் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாகக் (PTA) கைது செய்யப்பட்ட வவுணதீவைச் சேர்ந்த உயர்தர மாணவனொருவனுக்கு நாளைய தினம் பிணை வழங்க படலாம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த மாணவனை நாளைய தினம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று பிணை வழங்க படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

images/content-image/2023/12/1702961512.jpg

ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின் படி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு குறித்த மாணவனின் கோவைகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க குறித்த மாணவனின் கோவைகள் இன்று 11 மணியாவில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை சாணக்கியனின் விசேட கோரிக்கைக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக கைதுசெய்யப்பட்ட மேலும் சிலருக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!