சுகாதார அமைச்சின் அலுவலகம் ஒன்றிற்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

#SriLanka #Health #Court Order #Health Department
Mayoorikka
2 years ago
சுகாதார அமைச்சின் அலுவலகம் ஒன்றிற்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்கவின் அலுவலகத்திற்கு சீல் வைக்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சர்ச்சைக்குரிய ஹியுமன் இமியூனோகுளோபியூலின் மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் சந்தேகநபர்கள் நேற்று(18) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 வைத்தியர் சமன் ரத்நாயக்கவின் அலுவலகத்தை இன்று(19) முற்பகல் சோதனைக்குட்படுத்துமாறும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவிற்கமைய சமன் ரத்நாயக்கவின் அலுவலகத்திலுள்ள ஆவணங்கள் இன்று(19) பரிசோதிக்கப்படவுள்ளன.

 இந்த கொடுக்கல் - வாங்கல் தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று(18) கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!