யாழில் 800 ரூபாவால் பறிபோன உயிர்!

#SriLanka #Arrest #Police #Murder #Investigation
PriyaRam
2 years ago
யாழில் 800 ரூபாவால் பறிபோன உயிர்!

யாழ்ப்பாணத்தில் 800 ரூபாய் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியை சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் இளைஞர் ஒருவரிடம் 800 ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ள நிலையில், அதனைத் திரும்பச் செலுத்தாததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து இளைஞர் அந்நபர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/12/1702897763.jpg

இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை பொலிஸ் நிலையில் சரணடைந்துள்ள குறித்த இளைஞனைக் கைது செய்த கோப்பாய் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!