ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக தகவல்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக தகவல்!

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில்  இணைய தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.  

கடந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு இந்த குழுவினர் பாராளுமன்றத்திற்கு தெரிவானதாகவும் அவர் கூறினார். 

 இந்த குழுவுடன் கூட்டு எதிர்க்கட்சியாகவும் எதிர்காலத்தில் அரசியல் கூட்டமைப்பாகவும் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். 

 புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக  சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!