வரிச்சுமையை இல்லாது செய்வதற்கு ராஜபக்ஷர்கள் பதுக்கியுள்ள பணத்தை மீளப்பெறுவதே ஒரேவழி!

#SriLanka #Mahinda Rajapaksa #Gotabaya Rajapaksa #Basil Rajapaksa #Chandrika Kumaratunga
PriyaRam
2 years ago
வரிச்சுமையை இல்லாது செய்வதற்கு ராஜபக்ஷர்கள் பதுக்கியுள்ள பணத்தை மீளப்பெறுவதே ஒரேவழி!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க , குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி அதிகரிப்பை மேற்கொள்வதற்கு முன், ராஜபக்ச குடும்பத்திடமிருந்து திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினர் திருடிய பணத்தை திரும்பப் பெற்றால் பொதுமக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/12/1702705033.jpg

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் குறைந்த வரி வீதத்தை சுட்டிக்காட்டிய அவர், வரிகளை அதிகரிப்பதற்கு பதிலாக இழந்த நிதியை மீட்பதில் கவனம் செலுத்துமாறு பரிந்துரைத்தார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த அவர், ஜனவரி மாதம் முதல் வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாகவும், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மீது வரி விதிக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.

ராஜபக்ச குடுப்பத்தினர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பதுக்கி வைத்துள்ள நிதியை மீட்பதே இதற்கான தீர்வாக அமையும் என்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!