சீனாவில் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

#China #Accident #Hospital #world_news #MetroTrain #Rescue #tunnel
Prasu
2 years ago
சீனாவில் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் சுரங்கப்பாதையில் நின்று கொண்டிருந்த மெட்ரோ ரெயில் மீது மற்றொரு ரெயில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 102 பயணிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

மேலும், 500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ரெயில் விபத்து தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், தண்டவாளத்தில் பனி படர்ந்திருந்ததால் ரெயில் பாதியில் நிறுத்தப்பட்டது. 

அப்போது, அதே வழியில் வந்த மற்றொரு ரெயில், பிரேக் பிடித்தும் நிற்காமல் சறுக்கிக் கொண்டே சென்று, நின்று கொண்டிருந்த ரெயில் மீது மோதியது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் இல்லை என்றாலும் ரெயிலில் பயணித்தவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4