புதிய மனித ரோபோவை அறிமுகம் செய்யும் டெஸ்லா நிறுவனம்

#world_news #Human #Robot #technology #ElonMusk #company #Tesla #Introduce
Prasu
2 years ago
புதிய மனித ரோபோவை அறிமுகம் செய்யும் டெஸ்லா நிறுவனம்

டெஸ்லா நிறுவனம் தனது புதிய மனித ரோபோவைஅறிமுகம் செய்யும் காணொளி ஒன்றினைப் பகிர்ந்துள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆப்டிமஸ் ஜென் 2 எனப் பெயரிடப்பட்டுள்ள

இந்த ரோபோ இதற்கு முன் டெஸ்லா அறிமுகம் செய்த ரோபோக்களை விட அதிக திறன்களைக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழிநுட்பங்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு மனிதன் போலவே காட்சியளிக்கும் இந்த ரோபாவின், சமன் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. 

தயங்கி நடந்து வந்த ஆப்டிமஸ் இப்போது விறுவிறுவென நடக்கும் காணொளி பலரை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. முட்டை ஒன்றினை மிருதுவாகக் கையாளும் திறனையும் அந்தக் காணொளியில் காண முடிகிறது.

இப்போது வெளியிட்டுள்ள இந்தக் காணொளியில் அனைத்து கிண்டல்களையும் விமர்சனங்களையும் வாயடைக்கச் செய்துள்ளது டெஸ்லா. 

எலான் மஸ்க் தனது ரோபோ தொழில்நுட்பம் முழுமையாக வெற்றியடைந்த பின்னர், மனிதர்கள் செய்ய விரும்பாத எல்லா வேலைகளையும் இந்த ரோபோ திறப்பட செய்யும் எனத் தெரிவித்துள்ளார். காணொளியின் இறுதியில் ஆப்டிமஸ் ஜென் 2 ரோபோ நடமாடுவது அனைவர் மனதிலும் டெஸ்லா ரோபோ மீதான நம்பிக்கையை நிலைநாட்டியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4