யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகையை கையகப்படுத்தும் நடவடிக்கை!

#SriLanka #Jaffna
PriyaRam
2 years ago
யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகையை கையகப்படுத்தும் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் அளவீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்றைய தினம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீடு செய்யப்படவுள்ளதாக ஏற்னகவே நில அளவைத் திணைக்களத்தின் நில அளவையாளரால் முன் கூட்டிய அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

images/content-image/2023/12/1702619298.jpg

இதற்கமைய தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 12.0399 கெக்டேயர்( 29 ஏக்கர்) நிலம் அளவீடு செய்யப்படவுள்ளது.

மேலும், ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் பகுதிகளிலேயே தொடர்ச்சியான இந்த அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!