கனமழை காரணமாக திறக்கப்படவுள்ள இரணைமடு குளத்தின் வான்கதவுகள்

#SriLanka #people #Rain #Warning #Flood #sri lanka tamil news #air #Gates #pond #Open
Prasu
2 years ago
கனமழை காரணமாக திறக்கப்படவுள்ள இரணைமடு குளத்தின் வான்கதவுகள்

தற்போது பெய்துகொண்டிருக்கும் மழை இன்னும் 3 மணி நேரம் நீடிக்குமாக இருந்தால் நீர்மட்டம் உயர்ந்து வான் கதவுகள் திறக்கவேண்டி ஏற்படும் என இரணைமடு பகுதி நீர்ப்பாசன பொறியியளாளர் செந்தில்குமரன் அறியத்தந்தார் 

இரணைமடு குளத்திற்கு அதிக நீர் வருகை காணப்படுவதால் நாளை அதிகாலை 4 மணியளவில் வான் கதவுகள் திறக்கப்படலாம் என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

images/content-image/1702571545.jpg

 எனவே தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், கால்நடைகள், வாழ்வாதாரங்கள் தொடர்பிலும் அதிகம் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அப்பகுதி கமக்காரர் அமைப்பினர் மக்களிற்கு உரிய தகவல் கிடைக்க ஆவன செய்ய வேண்டுவதோடு நீர்செல்லும் வழிகளில் தடைகள் இருப்பின் அவற்றை அகற்ற விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம். தகவல்: இரணைமடு கமக்காரர் அமைப்பு சம்மேளனம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!