இலங்கைக்கு கிடைத்த அனுமதி: மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அமெரிக்கா
#SriLanka
#America
#IMF
#United States Ambassador to Sri Lanka
Mayoorikka
2 years ago
சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து இரண்டாவது கடன் மீளாய்விற்கான அனுமதி கிடைத்தமைக்கு அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இதனடிப்படையில், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளுக்கு ஆதரவாக இலங்கைக்கு சுமார் 337 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்த முக்கியமான நடவடிக்கை மூலம் நாட்டின் நீடித்த சீர்திருத்தங்களின் தொடர்ச்சியான முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கான பாதைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் தூதுவர் உறுதியளித்துள்ளார்.