மாணவிகள் போல் வேடமணிந்து ஆபாச காட்சிகளில் நடித்த தம்பதியினர் கைது
பாடசாலை மாணவிகள் போல் வேடமணிந்து ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிடும் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை பொலிசார் கைது செய்தனர். 28 வயதுடைய பெண் ஒருவரும் 29 வயதுடைய ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு திருமண விழாவும் நடைபெற உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் பட்டதாரிகள் என்பது சிறப்பு. பணம் சம்பாதிப்பதற்காக ஆபாச வீடியோக்களை தயாரித்து இணையத்தில் வெளியிட்டதாக அவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ரூபாவை சம்பாதித்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்ட போது, ஆபாச வீடியோக்களை தயாரிக்கப் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் கணினி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
காணொளியை பதிவு செய்ய பயன்படுத்திய பாடசாலை சீருடைகள், டைகள் மற்றும் பிற பொருட்களையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.