யாழில் தீக்கிரையான வர்த்தக நிலையம்!
#SriLanka
#Jaffna
#Police
#Accident
#Investigation
#fire
PriyaRam
2 years ago
யாழ்ப்பாணம் மீசாலை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த தீ பரவல் நேற்றிரவு 10:45 மணியளவில் ஏற்பட்ட நிலையில், வர்த்தக நிலையத்திலிருந்த பெருமளவான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தீயணைப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் குறித்த தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையம் மூடப்படும் போது விளக்கு ஏற்றப்பட்டுள்ளதாகவும் அதனூடாக தீ பரவியிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.