போர் நிறுத்தம் குறித்த ஐ.நா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு

#India #world_news #UN #Israel #War #supporters #Hamas
Prasu
2 years ago
போர் நிறுத்தம் குறித்த ஐ.நா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 

இஸ்ரேலில் தாக்குதலில் வடக்கு காசா முற்றிலும் சீர்குலைந்ததுள்ளது. பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைகாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும். பிணைக்கைதிகள் விடுவிக்க வேண்டும் என ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

பெரும்பாலான உலக நாடுகளும் இதை வலியுறுத்துகின்றன. இந்த நிலையில்தான் தற்போது ஐ.நா.வில் உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் தேவை என மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்த தீர்மானத்தில் உடனடியாக நிபந்தனையின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும்,மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 

அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. அர்ஜென்டினா, உக்ரைன், ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. 

 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4