மதரஸாவில் சிறுவன் உயிரிழப்பு விவகாரம் - பெறப்பட்ட வாக்குமூலம்!

#SriLanka #Death #Police #Investigation #Ampara
PriyaRam
2 years ago
மதரஸாவில் சிறுவன் உயிரிழப்பு விவகாரம் - பெறப்பட்ட வாக்குமூலம்!

அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள மதரஸாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பிரதேசத்தை சேர்ந்த சிசிடிவி தொழில்நுட்பவியலாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள மத்ரஸா ஒன்றில் கடந்த ஐந்தாம் திகதி இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார்.

images/content-image/2023/12/1702462917.jpg

இதேவேளை மரணம் தொடர்பில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டு பொலிஸில் முறைப்பாடளித்ததை தொடர்ந்து மதரஸாவின் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து குறித்த மரணமானது கொலை என சிறுவனின் பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!