வணிக கப்பல் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

#world_news #Attack #Missile #Israel #Ship #Hamas #rebel #Houthi #Sea
Prasu
2 years ago
வணிக கப்பல் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பினர் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதற்கிடையே செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஹவுதி அமைப்பினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் செங்கடலில் பாப் அல்-மண்டப் ஜலசந்திக்கு வடக்கே சுமார் 60 கடல் மைல் தொலைவில் வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, கப்பல் மீது தாக்கியதில் தீப்பிடித்தது என்றும் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலையடுத்து செங்கடல் பகுதியில் இருந்து அமெரிக்க போர் கப்பலான யு.எஸ்.எஸ். மேசன் அங்கு சென்று உதவியதாக தெரிவித்தனர். 

ஏற்கனவே பிரான்ஸ் நாட்டு கப்பல் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த ஹவுதி அமைப்பினர் முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4