19 வயதில் உயிரிழந்த பிரேசில் நாட்டின் சமூக வலைத்தள பிரபலம்

#Death #Women #Hospital #Brazil #Social Media #Tamilnews #Surgery #ill #celebrity
Prasu
1 year ago
19 வயதில் உயிரிழந்த பிரேசில் நாட்டின் சமூக வலைத்தள பிரபலம்

பிரேசில் நாட்டின் சமூக வலைத்தள பிரபலமாக திகழ்ந்தவர் 19 வயதான மரியா சோபியா வலிம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய உடற்பயிற்சி, தோல் தொடர்பான அழகு குறிப்புகள் போன்றவற்றை பதிவு செய்து பிரபலமானார். 

மேலும், தனக்கு ஆர்வமுள்ள உயர்தர பிராண்ட்கள் குறித்தும் வெளிப்படுத்துவார். அவரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். 19 வயதேயான மரியா சோபியாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்ச மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு கல்லீரல் வழங்க கொடையாளர் சம்மதம் தெரிவித்து அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

ஆனால் அறுவை சிகிச்சை முடிந்த 48 மணி நேரத்திற்குள் அவர் மரணம் அடைந்துள்ளார். சோபியா மரணம் அடைந்த தகவலை சியாராவில் உள்ள காசியாவின் மேயராக இருக்கும் அவரது தந்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

 19 வயதிலேயே மரணம் அடைந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் அவரை பின்தொடர்ந்தவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!