சிலாபம் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் இரு மாணவர்கள் காயம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சிலாபம் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் இரு மாணவர்கள் காயம்!

புத்தளம் - சிலபம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தற்காலிகமாக கட்டப்பட்ட மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 குறித்த பள்ளியில் கல்வி கற்கும் 10,11 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தாற்காலிகமாக கட்டப்பட்ட சுவருடன் இணைக்கப்பட்டிருந்த கேட்டை மாணவர்கள் மூட முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  

காயமடைந்த மாணவர்கள் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!