இன்றைய தினம் 55வது அகவையில் கால் பதிக்கும் யாழ் , கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள்

#SriLanka #Jaffna #Parliament #Kilinochchi #Birthday #sri lanka tamil news #srilankan politics #Principal #Teacher #Politician #Tamil News #Sridaran_MP
Prasu
2 years ago
இன்றைய தினம் 55வது அகவையில் கால் பதிக்கும் யாழ் , கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள்

கௌரவ யாழ்பானம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் M.E.d, B.A, PGDE(Mt), PGDEM, Sp.Tr(Ag) அவர்கள் இன்றைய தினம் 55வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இவர் 1968.12.08 அன்று சாதாரண குடும்பத்தில் பிறந்து கிளி/வட்டக்கச்சி மகா வித்தியாலயம்,கிளி/இந்துக்கல்லூரி,யா/அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்,கிளி/இராமநாதபுரம் மேற்கு ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்று பின்னர் கிளி/பரந்தன் இந்து கல்லூரி கடமையாற்றி சிறிது காலம் கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தில் ஆசிரிய ஆலோசகராகவும்கடமையாற்றினார்.

images/content-image/1701979371.jpg

பிறகு கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் பணி புரிந்து இந் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக 2010ஆண்டு தமிழ் மக்களின் வாக்குரிமை மூலம் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார்.

மக்கள் மனதில் உரிமையின் அடையாளமாக வாழ்ந்து கொண்டு வீரத்திலும் தேசியத்திலும் தலைவன் புகழை தனக்கான ஒர் தனி இடத்தை பிடித்திருக்கும் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு Lanka4 சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

images/content-image/1701979386.jpg

இவர் 2015 ஆண்டு இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்ட தேர்தல் தொகுதியில் அதிக விருப்பு(72258) வாக்குகளை பெற்றிருந்த இவர் 2020 ஆண்டு இடம் பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 35884 வாக்குகளை பெற்று மூன்றாவது முறையாகவும் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றில் தன் குரலை தாயகம், தேசியம், சுயநிர்ணயம் எனும் தமிழரின் உரிமைக் கோசத்தை மக்களுக்காக இன்றுவரை ஒலிக்கச் செய்து வருகிறார்.

images/content-image/1701979401.jpg

இவர் தனது குடும்பத்தினருடன் அகவை 55 இல் சீரும் சிறப்பும் பெற்று வாழ எமது lanka4 தளம் சார்பாக வாழ்த்துக்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!