காசாவில் உயிரிழந்த இந்திய வம்சாவளி வீரர்

#Death #world_news #Israel #War #Soldiers #Indian #Hamas #Gaza
Prasu
2 years ago
காசாவில் உயிரிழந்த இந்திய வம்சாவளி வீரர்

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தினந்தோரும் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த வரிசையில், இந்திய வம்சாவழியை சேர்ந்த இஸ்ரேல் ராணுவ வீரர் காசா எல்லையில் நடைபெற்ற சண்டையில் மரணம் அடைந்துள்ளார்.

ஆஷ்டோட்-ஐ சேர்ந்த 34 வயதான கில் டேனியல்ஸ் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற சண்டையில் உயிரிழந்தார். 

இவரின் இறுதி சடங்குகள் அவரின் சொந்த ஊரில் புதன் கிழமை நடைபெற்றது. காசா எல்லையில் நடைபெற்ற சண்டையின் போது கில் டேனியல்ஸ் உடன் மேலும் இருவர் உயிரிழந்தனர் என இஸ்ரேல் பாதுகாப்பு துறை தெரிவித்து இருக்கிறது.

 "ஒட்டுமொத்த இஸ்ரேலுக்காக களமிறங்கிய தீய மற்றும் கொடூரமான போரில் இஸ்ரேல் பல்வேறு ராணுவ வீரர்களை இழந்துள்ளது. அந்த வகையில் இன்று இஸ்ரேல் பாதுகாப்பு படையை சேர்ந்த ராணுவ வீரர் மாஸ்டர் கில் டேனியல்ஸ் (34) உயிரிழந்ததை எண்ணி வருந்துகிறோம்," என்று இந்திய யூத பாரம்பரிய மையம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4