பிரிட்டனின் குடிவரவு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்!

#SriLanka #world_news #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
பிரிட்டனின் குடிவரவு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்!

பிரிட்டனின் குடிவரவு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

சட்டவிரோத குடியேற்றவாசிகளை ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் திட்டத்திற்கு பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதற்கிடையில் ஜென்ரிகின் இராஜினாமா குறித்து பதிலளித்துள்ள ரிஷி சுனக், இது ஒரு ஏமாற்றம் எனவும், தவறான புரிதலின் அடிப்படையில் அவர் இராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் குடியேற்றத்துக்கான அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு பிரதமருக்கு நான் கடிதம் எழுதியது மிகுந்த வருத்தமளிக்கிறது என ஜென்ரிக் தனது X வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4