பதுளையில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி ஒருவர் தற்கொலை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பதுளையில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி ஒருவர் தற்கொலை!

பதுளையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாகிய நிலையில்  தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

குறித்த மாணவியின் பெற்றோர் தனித்தனியாக வசித்து வரும் நிலையில், மாணவி தாயுடன் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாயும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது தனது 70 வயது பாட்டியுடன் அவர் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் சுமார்  ஒரு வாரத்திற்கு முன்னர் அவரது 20 வயது காதலன் முச்சக்கரவண்டியில் வந்து பதுளை சருங்கல் கந்தவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.  குறித்த தினத்தில் பயிற்சி வகுப்பிற்கு செல்வதாக கூறி மாணவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

அங்கு குற்றம் நடந்ததாக தனது தோழிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் தெரியவந்துள்ளது. வீட்டிற்கு வந்த  பாடசாலை மாணவி தனது பாட்டி சாப்பிட்ட மாத்திரைகளை உட்கொண்டதால் கடும் நோய்வாய்ப்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

அவர் தனது தோழிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் தான் தனது காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாகவே இந்த மாத்திரைகளை உட்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காதலனை நேற்று (06.12) கைது செய்த பதுளை பொலிஸார் இன்று (07.12)நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!