தொடர்ந்தும் காசாவில் ஆதிக்கம் செலுத்தும் இஸ்ரேல் ராணுவம்

#world_news #Attack #Israel #War #Military #Hamas #Gaza
Prasu
2 years ago
தொடர்ந்தும் காசாவில் ஆதிக்கம் செலுத்தும் இஸ்ரேல் ராணுவம்

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா முனை பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தெற்கு காசாவின் முந்தய நகரமான தான் யூனிசை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவத்தின் தளபதி ஜெனரல் பிங்கெல் மேன் கூறுகையில்ற, "தரைப்படை நடவடிக்கை தொடங்கியதில் இருந்து நாங்கள் மிகவும் தீவிரமான நிலையில் இருக்கிறோம். 

தெற்கு காசாவில் உள்ள முக்கிய நகரமான கான் யூனுசை முற்றிலும் சுற்றி வளைத்து உள்ளோம். அந்த நகரின் மையப்பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே வடக்கு காசாவில் ஜபாலியா, ஷுஜாய் பகுதிகளில் சண்டையிட்டு வருகிறோம். வடக்கு காசா பகுதியில் பல ஹமாஸ் கோட்டைகளை கைப்பற்றினோம். தற்போது தெற்கில் ஹமாசின் கோட்டை நகருக்கு எதிராக செயல்பட்டு வருகிறோம்" என்றார்.

 இஸ்ரேல் துருப்புகள் மற்றும் டாங்கிகள் கடலோர காசா பகுதி எல்லை வேலி வழியாக கான்யூனுஸ் நகருக்குள் நுழைந்து வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4