கிரிக்கெட் ஸ்டேடியம் ஊழியர்களுக்கு பரிசுதொகை வழங்கவுள்ளதாக அறிவிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கிரிக்கெட் ஸ்டேடியம் ஊழியர்களுக்கு பரிசுதொகை வழங்கவுள்ளதாக அறிவிப்பு!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது ஸ்டேடியம் ஊழியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பரிசுத் தொகை விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. 

இந்த பரிசுத்தொகைக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதான ஊழியர்கள் மற்றும் பல்லேகல மைதான ஊழியர்கள் உரிமையுடையவர்கள் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தின் மைதான ஊழியர்கள் 138 பேருக்கும், பல்லேகல மைதானத்தின் மைதான ஊழியர்கள் 115 பேருக்கும் வரும் வெள்ளிக்கிழமை பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.  

இதற்காக ஆசிய கிரிக்கட் பேரவையினால் 25,000 டொலர்களும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் 25,000 டொலர்களும் வழங்கப்பட்டுள்ளன. 

விநியோகிக்கப்படவுள்ள மொத்தத் தொகை 16 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஸ்டேடியம் ஊழியர்களுக்கு இந்த பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!