ஹோண்டுராஸில் பேருந்து விபத்து : 11 பேர் பலி, 25 பேர் காயம்!

#SriLanka #Accident #world_news #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஹோண்டுராஸில் பேருந்து விபத்து : 11 பேர் பலி, 25 பேர் காயம்!

ஹோண்டுராஸில் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில், ஏறக்குறைய 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தலைநகரில் இருந்து 41 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று (05.12) குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேருந்தில் 40 பேர் பயணித்த நிலையில்,  11 பேர் உயிரிழந்தாகவும், 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், மீட்பு தொடர்வதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 

images/content-image/1701834232.jpg

விபத்தை தொடர்ந்து இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஹொண்டுராஸ் அதிபர் சியோமாரா காஸ்ட்ரோ சமூக ஊடகங்களில், அவசரநிலையைச் சமாளிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு  அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

பலத்த காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் டெகுசிகல்பாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4