ஜேர்மனியில் கடுமையான பனிப்பொழிவு : மூவர் பலி!

#SriLanka #world_news #Lanka4 #Tamilnews #Germany
Thamilini
2 years ago
ஜேர்மனியில் கடுமையான பனிப்பொழிவு : மூவர் பலி!

ஜேர்மனியில் கடுமையான பனிப்பொழிவில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஜேர்மனியின் கிழக்கு மாகாணமான சாக்சோனியில் உள்ள Erzgebirge மலைப்பகுதியில் பள்ளிப் பேருந்து ஒன்று மாணவர் ஒருவர் மீது மோதியில் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் மேலும் 10 பள்ளி மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் பஸ் டிரைவர் உட்பட இருவர் பலத்த காயம் அடைந்தாக தெரிவிக்கப்படுகிறது. 

அதேபோல் செக் எல்லைக்கு அருகில் உள்ள செஹ்மடல் கவுண்டியில் பேருந்து ஒன்று மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை கடுமையான பனி்ப்பொழிவு காரணமாக பெரும்பாலான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக முனிச்சில், அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன அல்லது காலை 6 மணி முதல் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4