இணையத்தில் மகளின் புகைப்படங்களை வெளியிட முயன்ற கணவன்: கொலை செய்த மனைவி

#SriLanka #Death #Police #Murder #Crime #kandy #wife
Mayoorikka
2 years ago
இணையத்தில் மகளின் புகைப்படங்களை வெளியிட முயன்ற கணவன்: கொலை செய்த மனைவி

தனது 14 வயது மகளின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து பணம் தேட முயற்சித்த கணவனை மனைவி வெட்டிக் கொன்ற சம்பவம் வெல்லவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

 வைத்தியசாலை உதவியாளராக பணியாற்றிய 37 வயதுடைய வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

 வீட்டின் குளியலறையில் மறைந்திருந்த கணவன் மீது மனைவி, மிளகாய்ப் பொடியை வீசியதாகவும், மிளகாய்ப் பொடி தாக்குதலுக்கு உள்ளானவர், வெளியே வந்த போது, மனைவி வெட்டிக் கொன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 தாக்குதலுக்கு இலக்காகி வீட்டின் வரவேற்பறையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இறந்தவர் சமீபத்தில் யூடியூப் சேனலை தொடங்கி, பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அதை பிரபலப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வந்தது பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!