யாழில் பெருமளவில் மீட்கப்பட்ட இராணுவ அங்கிகள்!
#SriLanka
#Jaffna
#NorthernProvince
#Sri Lankan Army
PriyaRam
1 year ago
கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதியில் பெருமாளான இராணுவ அங்கிகள் (Flak jacket) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விடுவிக்கப்பட்ட பகுதியில், காணி ஒன்றினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்து, கிணற்றினை இறைத்த போது கிணற்றினுள் இருந்து பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

அது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவித்ததை அடுத்து இராணுவத்தினர், தாம் அதனை அப்புறப்படுத்துவதாக கூறியுள்ளனர்.
அதனால் அவரது காணிக்குள் இராணுவ அங்கிகள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளன.
இவை யுத்தத்தில் ஈடுபடும் இராணுவத்தினர், தமது உயிரை பாதுகாத்து கொள்வதற்காக அணிந்து கொள்ளும் ஒருவகை கவச அங்கி என்பது குறிப்பிடத்தக்கது.