தேர்தலில் புதிய கூட்டணியுடன் களமிறங்குமா ஐக்கிய தேசிய கட்சி?
ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் தேர்தலுக்காக மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் அமைப்புப் பணிகளை பல்வேறு கட்சிகளிடம் ஒப்படைத்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் கூட்டத்தில் இது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சி புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அமைப்பானது மிகவும் மந்தகதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அடுத்த வருடம் புதிய முறைமையின் கீழ் அதனை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு நெருக்கமானவரான மலிக் சமரவிக்ரம இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.