இலங்கை மாணவர்களுக்கு ஜப்பானில் தொழில் பயிற்சி

#SriLanka #Student #Japan
Mayoorikka
2 years ago
இலங்கை மாணவர்களுக்கு ஜப்பானில் தொழில் பயிற்சி

இலங்கை பல்கலைக்கழகங்களில் விவசாயம் தொடர்பில் கற்கும் மாணவர்களுக்கு ஜப்பானில் உள்ள மூன்று உயர்கல்வி நிறுவனங்களில் தொழில் பயிற்சியை வழங்க ஜப்பானின் ஆசிய மனிதவள வங்கி இணங்கியுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

 விவசாயத்திற்கு மாத்திரமன்றி பெருந்தோட்ட பயிர்களை கற்கும் மாணவர்களுக்கும் இந்த பயிற்சியை வழங்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 பயிற்சியின் போது மாதாந்த உதவித்தொகையாக ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 960 யென் அல்லது 3 இலட்சத்து 28 ஆயிரத்து 341 இலங்கை ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!