ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு - விளையாட்டு போட்டி ரத்து

#Death #world_news #Warning #Climate #football #Germany #Snow #cancelled
Prasu
2 years ago
ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு - விளையாட்டு போட்டி ரத்து

தெற்கு ஜெர்மனியில் நேற்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. விமான நிலைங்கள் மூடப்பட்டன. இதனால் விமான போக்குவரத்து தடைப்பட்டது. 

அத்துடன் ரெயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. பேயர்ன் முனிசி- யூனியன் பெர்லின் ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற இருந்த கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. மேலும், பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடும் பனிப்பொழிவால் 760 விமான சேவை பாதிக்கப்பட்டன. ஜெர்மனியின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான முனிச் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமை வரை 40 செ.மீ. அளவிற்கு பனிப்பொழிவு இருந்துள்ளது. 

பொதுமக்கள் வீட்டிற்குள்ளே இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பனிப்பொழிவு மற்றும் குறைந்த வெட்பநிலை ஆகியவற்றால் ஜெர்மனியின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4