பிலிப்பைன்ஸ் - மிண்டானோவில் வழிப்பாட்டின் போது வெடி விபத்து : 03 பேர் உயிரிழப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பிலிப்பைன்ஸ் - மிண்டானோவில் வழிப்பாட்டின் போது வெடி விபத்து : 03 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸின் மிண்டானோவில் கத்தோலிக்க மத வழிபாட்டின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் பலியாகினர். 

இந்த வெடிப்பில் மேலும் 09 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ மாகாண பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்ற கத்தோலிக்க மத வழிபாட்டின் போது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. 

பல்கலைக்கழக வளாகத்திற்கு மேலதிக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4