பேலியகொட படுகொலைச் சம்பவம் - கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்!

#SriLanka #Colombo #Arrest #Police #Murder #Investigation
PriyaRam
2 years ago
பேலியகொட படுகொலைச் சம்பவம் - கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்!

பேலியகொடையில் அண்மையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பேலியகொடையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 30, 37, 43 மற்றும் 53 வயதுடைய 4 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

images/content-image/2023/12/1701505371.jpg

குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடம் இருந்து வாள் மற்றும் கத்தி என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நவம்பர் 28 ஆம் திகதி பேலியகொட, தொரண சந்தியில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!