பாரிஸில் 1941 கோடி ரூபாய் செலவில் நடந்த திருமணம்

#France #America #world_news #Dollar #Swedan
Prasu
2 years ago
பாரிஸில் 1941 கோடி ரூபாய் செலவில் நடந்த திருமணம்

சமீபத்தில் பாரிஸில் 59 மில்லியன் அமெரிக்க டொ லர்கள் (சுமார் 1941 கோடி ரூபாய்) செலவில் நடந்த திருமணம் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் வசிக்கும் 26 வயதான Madeleine Brockway மற்றும் அவரது காதலன் Jacob Lagron ஆகியோர் இவ்வாறு திருமணம் செய்து கொண்டதாகவும், இந்த திருமணத்திற்கு ‘நூற்றாண்டின் திருமணம்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணப்பெண்ணின் தந்தை அமெரிக்காவின் முன்னணி கார் விற்பனை நிறுவனம் ஒன்றின் உரிமையாளர், மேலும் அவர் தனது மகளின் திருமணச் செலவு முழுவதையும் ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த திருமண விழாவில் உலக பணக்காரர்கள், பிரபல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த திருமண விழாவில், பாரிஸில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய மாளிகையான வெர்சாய்ஸ் அரண்மனையில் ஒரு இரவு விருந்து, ஐந்து நட்சத்திர ரிசார்ட்டில் விருந்து வாரம் மற்றும் மணமகன் மற்றும் மணமகளின் நண்பர்களுக்கான ஆடம்பரமான மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

 திருமண விழாவில் பல்வேறு விலைகளில் 119 அலங்காரப் பொருட்கள் உள்ளடக்கப்பட்டதாகவும், அதன் மதிப்பு 28 முதல் 10,000 அமெரிக்க டொ லர்கள் வரை இருக்கும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4