சம்பூர் பகுதியில் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சம்பூர், தொடுவான்குளம் ஏரியில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் முதலையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர் நேற்று (29.11) பிற்பகல் ஏரியில் நீராடச் சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞனை பிரதேசவாசிகள் முதலையிடம் இருந்து மீட்டுள்ளதுடன், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தோப்பூர் பாடலிபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.