இலங்கை யாழ் மண்ணில் நடைபெறவுள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் நிகழ்வு!

#SriLanka #Jaffna #Hindu #Temple #Tamil People #Food #function #sri lanka tamil news #Kalviyanggadu
Prasu
10 months ago
இலங்கை யாழ் மண்ணில் நடைபெறவுள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் நிகழ்வு!

இலங்கை வடமாகாணம் யாழ்ப்பாணம் கல்வியங்காடு சந்தியில் செம்மணி போகும்வீதியில் சந்தியில் இருந்து 200m தூரத்தில் ஆலயமுகப்புதெரியும் நிலையில் உள்ள சங்கிலிய மன்னன் வழிபட்ட ஆலயங்களில் ஒன்றான சந்திரசேகரப்பிள்ளையார் கலாச்சாரமண்டபமும் அன்னதான மண்டபமும் அருகருகே அமையப்பெற்ற சிறப்பான மண்டபங்களில் நம் ஆன்மிககுரு அருட்திரு அம்மா அவர்களின் மானுட வடிவம் ஒளியுடம்பாக ஓங்காரத்தினுள் கலந்து சமாதிநிலையடைந்து 45 ம் நாள் எதிர்வரும் 03.12.2023ஞாயிற்றுக்கிழமையாகும் .

அதனையிட்டு அன்று காலை 09.00 மணிமுதல் பூசை வழிபாடுகள் நடைபெற்று, அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டு மிகச்சிறப்பாக அறுசுவை விருந்தாக மதிய உணவு வழங்கப்படுவதோடு,தொடர்ந்து 100 வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களுக்கு தலா 3.000/= பெறுமதியான உலருணவுப் பொதிகளும் 108 மாணவச்செல்வங்களுக்கு தைமாதம் ஆரம்பிக்கும் புதிய வகுப்பில் கல்விகற்க தேவையான அப்பியாசக்கொப்பிகள் அடங்கிய பொதிகளும் வழங்கப்படவுள்ளன.

மதிப்பார்ந்த கௌரவ ஜனாதிபதியின் மேலதிக செயலர் திரு . இலட்சுமணன் இளங்கோவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார். 

அவருடன் முன்னாள் யாழ்ப்பாணம் மாநகரசபை திரு. சிவஞ்ஞானம் ஐயா மற்றும் பல அதிதிகளோடு ஆதிபராசக்தி அறப்பணித் தொண்டர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர் . 

வடபகுதிவாழ்அனைத்து மக்களும் செவ்வாடை சக்திகளும் கலந்து சிறப்பிப்பதோடு மதிய போசனத்திலும் கலந்துகொண்டு அம்மாவின் சித்தர் அனுபூதியை பெற்றுய்யும் வண்ணம் பேரன்புடன் அழைக்கின்றோம் .

“அனைவரும் வருக அன்னையருள் பெறுக “

இது கலியுகம் , பக்தி யுகம் !

சக்தி யுகம் ,சக்தியே சாதிக்கும் தன்மை கொண்டது!

ஓம்சக்தி! ஆதிபராசக்தி!!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!