ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி பயணமாகும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

#SriLanka #Sri Lanka President #Flight #Ranil wickremesinghe #Dubai
Mayoorikka
2 years ago
ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி பயணமாகும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (Cop28) ஐக்கிய அரபு இராச்சியத்தில் வியாழக்கிழமை (30) ஆரம்பமாகவுள்ளது.

 இந்த நிலையில், குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி புறப்பட உள்ளார்.

 காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவது உள்ளிட்ட முக்கிய மூன்று யோசனைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைக்க உள்ளார். 

 அத்துடன், மூன்றாம் உலக நாடுகளுக்கான காலநிலை நீதி மன்றத்தை நிறுவுதல் மற்றும் வெப்பமண்டல மன்றத்தை நிறுவுதல் ஆகிய முன்மொழிவுகளையும் ஜனாதிபதி முன்வைக்க உள்ளார்.

 இதேவேளை, இலங்கையிலிருந்து 20 இளைஞர் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்குபற்றவுள்ளனர்.

 அமைச்சர்களான அலி சப்ரி, காஞ்சன விஜேசேகர, கெஹலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, காலநிலை மாற்றத்திற்கான ஜனாதிபதி ஆலோசகர் ருவான் விஜேவர்தன ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!