2023 புலமைப்பரிசில் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 months ago
2023 புலமைப்பரிசில் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

2023ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை ஒன்லைன் முறையின் மூலம் மீள் கணக்கெடுப்பு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான மேல்முறையீடுகளுக்கு 27.11.2023 முதல் 04.12.2023 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட பரீட்சை பரீட்சார்த்திகள்  பாடசாலை அதிபர் பாடசாலைக்கு வழங்கிய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தில் பாடசாலை உள்நுழைவில் நுழைந்து மேல்முறையீட்டு கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் மரண அறிவித்தல்களுக்கு