கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் அஞ்சலி!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மார்வீர் தினத்தையொட்டி, மேற்படி அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் (27.11) வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் பொலிஸாரினால் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வல்வெட்டி துறையிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கோப்பாய் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டு தற்போது இராணுவத்தின் 51 ஆவது படையணியின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.