பாரிய போராட்டத்திற்கு தயாராகும் அரச மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்கள்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பாரிய போராட்டத்திற்கு தயாராகும் அரச மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்கள்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளைய (27.11) தினம் போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளன.  

குறித்த போராட்டம் நாளை நண்பகல் 12 மணிக்கு நடத்தப்படும் என அதன் அழைப்பாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.

20,000 சம்பள அதிகரிப்பு, ஜனவரி முதல் உயர் கொடுப்பனவு மற்றும் சம்பளம் வழங்குதல், 2016 ஆம் ஆண்டு முதல் இழந்த முழு ஓய்வூதிய உரிமையை மீட்பது போன்ற பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் நல்ல பதில் கிடைக்காவிட்டால் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகசந்தன சூரியஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!